ஆலோசனை

5 11 2010

பைபிளின் ஆபாசம் 6 :

பைபிளில் உள்ள ஆபாசங்களைப் பார்த்து வருகிறோம். பைபிளின் ஆபாசம் சம்பந்தமான முந்தைய பதிவுகள்:

இரு சகோதரிகள்

இரு புதல்விகள்

அண்ணனும் தங்கையும்

மாமனாரும் மருமகளும்

தீர்க்கத்தரிசிகள்

அகிதோபல் என்பவர் அப்சலோம் என்பரின் தந்தை வைத்திருக்கும்
வைப்பாட்டிகளிடம் அப்சலோமை உடலுறவு கொள்ளச் சொல்கிறார். அது அனைவருக்கும்
தெரிய வேண்டுமாம். மகனை தந்தையின் வைப்பாட்டிகளோடு கள்ளத் தொடர்பு
வைக்கச் சொன்ன அகிதோபலின் இந்த கேடு கெட்ட ஆலோசனை கடவுளின் வாக்காம்.

அந்த வசனங்கள்:

20.அப்சலோம் அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று
கேட்டான்.

21. அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச்
சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும்
கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.

22. அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல்
முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.

23.அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது.

இரண்டாம் சாமுவேல்,
அதிகாரம் 16

ஒரு இறைவேதம் (?) என்ன சொல்ல வருகிறது ?. இதிலிருந்து மக்கள் என்ன படிப்பினையை மேற்கொள்ள முடியும் ?. குடும்பத்தில் இதை கூச்சமின்றி வாசிக்கத் தான் முடியுமா?

கிறிஸ்தவ நண்பர்களே சிந்தியுங்கள்….


செயற்பாடுகள்

Information