ஈஸ்டர் சண்டே என்பது சரியா?

30 03 2013

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்திலுள்ள முரண்பாடுகளையும், அவர் உடல் கல்லறையில் இருந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்திலுள்ள முரண்பாடுகளையும் சென்ற பதிவுகளில் பார்த்தோம்.

கல்லறையில் இருந்து இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும், சிலுவையில் அறையப்பட்ட தினம் புனிதவெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் சண்டே என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது, இவர்களில் இந்த நம்பிக்கைப்படி ஈஸ்டர் கோட்பாடு சரியா என்பதையும், இவ்விஷயத்தில் பைபிளின் தவறைப் பற்றியும், இப்பதிவில் காண்போம்:

இயேசுவிடம் சிலர் வந்து ஒரு அடையாளத்தைக் காட்டுமாறு கேட்கிறார்கள். அதற்கு இயேசு அளித்த பதிலில் உள்ள முரண்பாடுகள்:

அடையாளம் உண்டு அடையாளம் இல்லை

பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

மத்தேயு 16:1,4

அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.

மாற்கு 8:11,12

இதில் எது சரி? எந்த அடையாளமும் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையா? அல்லது யோனா அடையாளம் உண்டு என்பது உண்மையா?

கேள்வி கேட்டவர்களின் பிறப்பை கொச்சைப்படுத்திய இயேசு(?):

யோனா அடையாளம் பற்றிய வசனத்தில் கேள்வி கேட்டவர்களை பொல்லாத விபசாரச் சந்ததியர் என்று இயேசு திட்டியதாக பைபிள் கூறுகிறது, இதன் பேச்சு தமிழ் வாசகம் மிகவும் கீழ்தரமானது, நற்பண்புடையவர்கள் இப்படி பேச மாட்டார்கள், ஆனால் இது போன்ற இழிவான ஒன்றை இயேசு பேசினார் என்று சொல்வது அவரை இழிவுப்படுத்துவதாக ஆகாதா?

சரி, விஷயத்திற்கு வருவோம். ஈஸ்டர் கோட்பாடு, யோனா அடையாளத்தைப் பற்றிக் கூறும் வசனத்தை அடிப்படையாக வைத்தே வருகிறது, அதைப் பற்றிப் பார்ப்போம்:

யோனாவின் அடையாளம்:

அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் யோனா இருந்தது போல, மனுஷகுமாரனும் மூன்று பகலும் மூன்று இரவும் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயு 12:38-40

கர்த்தர் யோவானாவை ஒரு தீமைக்கு எதிராக பிரசங்கிக்க வேண்டி நினிவேக்குப் போகச் சொல்கிறார், ஆனால் யோனாவோ கர்த்தரின் பேச்சை கேட்காமல், நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்குக் கப்பலில் தப்பிச் செல்கிறார். இதன் காரணமாக கர்த்தர் யோவானாவை கடலில் விழச் செய்து ஒரு பெரிய மீன் அவர் விழுங்கி அதன் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவும் உயிருடன் இருந்தார், பின் கர்த்தர் கட்டளைப்படி மீன் அவரை வெளியேற்றியது, இது போல் இயேசுவும் மூன்று பகலும் மூன்று இரவும் கல்லறையில் இருப்பார். இது தான் யோனாவின் அடையாளம் ஆகும்.

ஆனால் இயேசு கூறியது போல் நடக்கவில்லை. முதலில் யோனா அடையாளத்தை எடுத்துக் கொள்வோம், அவ்வசனத்தில் யோனாவை ஒப்பிட்டு அவர் இருந்தது போல் தானும் இருப்பேன் என்று இயேசு கூறுகிறார், யோனா மீன் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுமே உயிருடன் தான் இருந்தார்.

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீன் வயிற்றிலே யோனா மூன்று பகலும் மூன்று இரவும் இருந்தான். அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கி விட்டது.

யோனா 1:17, 2:1,10

ஆனால் இயேசு கல்லறையில் இருந்ததோ பிணமாக(?), அவர் உடல் தான் கல்லறையில் இருந்தது.

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் உடலைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

லூக்கா 23:46,52,53

இயேசு உயிரற்று(?) கல்லறையில் இருந்ததும், யோனா உயிருடன் மீன் வயிற்றில் இருந்ததும் ஒன்றா? பின் எப்படி யோனா இருந்தது போல என்பது நிரூபணமாகும்? யோனா இருந்தது போல என்ற இயேசுவின் கூற்று பொய்த்துப் போனது.

3 பகல் 3 இரவும் 1 பகல் 2 இரவும் ஒன்றா?

யோனாவைப் போல் தான் இயேசு இருக்கவில்லை, அவர் கூறிய கால அளவிலாவது அவர் இருந்தாரா என்றால் அதுவும் கிடையாது. அதைப் பற்றிப் பார்ப்போம்:

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தது(?) ஆயத்த நாள் அன்று. அதாவது ஓய்வு நாளுக்கு முந்தைய நாள்.

யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

யோவான் 19:42

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமான போது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் உடலைக் கேட்டான்.

மாற்கு 15:25,34,37,42,43

அது சாயங்காலம் என்பதால் ஆயத்த நாள் முடிவடைந்து, ஓய்வு நாளும் ஆரம்பமாகி விட்டிருந்தது.

அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் உடலைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது, ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

லூக்கா 23:52-54

யூதர்களின் கணக்கீட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் என்பது முந்தைய நாளின் சாயங்காலத்திலிருந்து அடுத்த நாள் சாயங்காலம் வரையிலான 24 மணி நேரமே.

அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள், அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்த வேண்டும், அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம் மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

லேவியராகமம் 23:32

ஓய்வு நாள் என்பது வாரத்தின் ஏழாவது நாள். அதாவது சனிக்கிழமை.

Remember the sabbath day, to keep it holy. Six days you shall labor and do all your work, but the seventh day is a sabbath of the LORD your God; in it you shall not do any work, you or your son or your daughter, your male or your female servant or your cattle or your sojourner who stays with you. For in six days the LORD made the heavens and the earth, the sea and all that is in them, and rested on the seventh day; therefore the LORD blessed the sabbath day and made it holy.

Exodus 20:8-11

The Sabbath day that the bible speaks about is Saturday, the seventh day of the week (Genesis 2:2-3, Leviticus 23:2-3). The Jews have always considered a day to be the interval from sunset to sunset, and they have always observed the Sabbath from Friday evening until Saturday evening. Modern Jews continue the tradition of observing a holy day of rest on the Sabbath (Shabbat in Hebrew) from sunset Friday until nightfall Saturday. The Old Testament law prohibited doing any work on the Sabbath, and one could receive the death penalty for breaking this law (Numbers 15:32-36).

Ref: christian bible reference . org

இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு இறக்கிறார்(?) அவர் உடல் அன்றிரவு கல்லறையில் வைக்கப்படுகிறது, ஓய்வு நாளான சனிக்கிழமை முழுவதும் கல்லறையிலேயே உள்ளது.

கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய உடல் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

லூக்கா 23:55,56

பின் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை விடிவதற்குள்ளேயே அவர் உடல் கல்லறையில் காணவில்லை.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

யோவான் 20:1,2

வாரத்தின் முதல் நாள் என்று வரும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை என மொழிபெயர்த்த பைபிள்கள் மற்றும் விளக்க உரைகள்:

JOHN 20:1:

New Living Translation (©2007):

Early on Sunday morning, while it was still dark, Mary Magdalene came to the tomb and found that the stone had been rolled away from the entrance.

GOD’S WORD® Translation (©1995):

Early on Sunday morning, while it was still dark, Mary from Magdala went to the tomb. She saw that the stone had been removed from the tomb’s entrance.

Clarke’s Commentary on the Bible:

The first day of the week – On what we call Sunday morning, the morning after the Jewish Sabbath.

LUKE 24:1:

Aramaic Bible in Plain English (©2010):

But on Sunday morning, while it was dark, they came to the tomb and they brought the spices that they had prepared, and there were other women with them.

People’s New Testament:

Upon the first day of the week. The Lord’s day, our Sunday.

ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே அதிக இருளாக இருக்கும் போதே இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்று யோவான் சுவிஷேசம் கூறுகிறது, அப்படியானால் இயேசுவின் உடல் கல்லறையில் இருந்த கால அளவு:

வெள்ளிக்கிழமை இரவு (1 இரவு)

சனிக்கிழமை பகல் (1 பகல்)

சனிக்கிழமை இரவு (1 இரவு)

ஆக மொத்தம் இயேசுவின் உடல் கல்லறையில் இருந்தது ஒரு பகலும் இரு இரவும் மட்டுமே, ஆனால் இயேசு கூறியதோ மூன்று பகலும் மூன்று இரவும். இவ்வடிப்படையில் கணக்கிட்டால் (வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு பகல், ஞாயிறு இரவு, திங்கல் பகல்) திங்கட்கிழமை தான் ஈஸ்டர் வருகிறது,

ஆக யோனா போல என்பதும் பொய்யாகி விட்டது, அதற்கு இயேசு சொன்ன கால அளவும் பொய்த்து விட்டது. புதிய ஏற்பாடே இயேசுவைப் பற்றியது, ஆனால் அவர் கூறியது பொய்த்துப் போனது.. பைபிளே சொல்லாத கோட்பாட்டின்படி அவரை தேவன் என்றும், தேவனின் மகன் என்றும் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவரால் அவரையும் (சிலுவையிலிருந்து) காப்பாற்ற முடியவில்லை, அவர் கூறியதையும் காப்பாற்ற முடியவில்லை, இவ்வளவு நடந்தும் அவரை தேவன் என்று சொன்னால் அது மடத்தனம் இல்லையா?

கூறியது ஒன்று நடந்தது வேறொன்று என இயேசு கூறியது தான் பொய்யாகி விட்டது, கிறிஸ்தவர்களாவது அந்த பொய்க்கு முட்டு கொடுத்து ஈஸ்டரை திங்கட்கிழமை என்று கொண்டாடியிருக்கலாம், (மாணவர்களுக்கு விடுமுறையாவது கிடைத்திருக்கும்) ஆனால் இவர்கள் ஈஸ்டரை ஞாயிற்றுக்கிழமை என்று வைத்து அந்த பொய்யோடு இந்த பொய்யையும் அதிகப்படுத்தி விட்டார்கள்.

முரண்பாடுகளின் தொகுப்பான, இந்த சிலுவை மற்றும் உயிர்த்தெழுந்த சம்பவத்தை நம்பி, இயேசுவை பொய்யராகவும், கீழ்தரமாகப் பேசுபவராகவும் சித்தரித்து அவரைக் கேவலப்படுத்தும் பைபிளை இறைவேதமாக நம்பி குருட்டுத்தனமாக ஈஸ்டரை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள்.


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: