கணிதப்புலமை 3

5 12 2012

பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்குத் தெரியும் எளிய கணிதம் கூட பைபிளின் ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பதை கணிதப்புலமை 1, கணிதப்புலமை 2 ஆகிய இருபதிவுகளில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக எண்ணிக்கைகளை கணக்கிடுவது சம்பந்தமாக பைபிளின் தவறுகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்:

9.எதுத்தூனின் மகன்கள் எத்தனை பேர்?

எதுத்தூனின் குமாரராகிய கெதலியா (1), சேரீ (2), எஷாயா (3), அஷபியா (4), மத்தித்தியா (5) என்னும் ஆறு பேரும்.

1 நாளாகமம் 25:3

ஐந்து மகன்கள் பெயர்களையும் தனித்தனியாக கூறிய பைபிள் மொத்த எண்ணிக்கையை கூறும் போது ஆறு என்கின்றது.

10.செமாயாவின் மகன்கள் எத்தனை பேர்?

செமாயாவின் குமாரர்: அத்தூஸ் (1), எகெயால் (2), பாரியா (3), நெயாரியா (4), செப்பாத் (5) என்னும் ஆறு பேர்.

1 நாளாகமம் 3:22

இதிலும், ஐந்து மகன்கள் பெயர்களையும் தனித்தனியாக கூறிய பைபிள் மொத்த எண்ணிக்கையை கூறும் போது ஆறு என்கின்றது.

11.செருபாபேலின் மகன்கள் எத்தனை பேர்?

செருபாபேலின் குமாரர்: மெசுல்லாம் (1), அனனியா (2), இவர்கள் சகோதரி செலோமீத், அசூபா (3), ஒகேல் (4), பெரகியா (5), அசதியா (6), ஊசாபேசேத் (7) என்னும் ஐந்து பேருமே.

1 நாளாகமம் 3:19,20

ஏழு மகன்கள் பெயர்களையும் தனித்தனியாக கூறிய பைபிள் மொத்த எண்ணிக்கையை கூறும் போது ஐந்து என்கின்றது. (மகன்கள் பெயர்களைக் கூற வந்த பைபிள் இடையில் மகள் பெயரையும் சேர்த்து விட்டது.)

12.யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?

கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல் (1), ஏதேர் (2), யாகூர் (3), கீனா (4), திமோனா (5), அதாதா (6), கேதேஸ் (7), ஆத்சோர் (8), இத்னான் (9), சீப் (10), தேலெம் (11), பெயாலோத் (12), ஆத்சோர் (13), அதாத்தா (14), கீரியோத் (15), எஸ்ரோன் என்னும் ஆத்சோர் (16), ஆமாம் (17), சேமா (18), மொலாதா (19), ஆத்சார்கதா (20), எஸ்மோன் (21), பெத்பாலேத் (22), ஆத்சார்சுவால் (23), பெயெர்செபா (24), பிஸ்யோத்யா (25), பாலா (26), ஈயிம் (27), ஆத்சேம் (28), எல்தோலாத் (29), கெசீல் (30), ஒர்மா (31), சிக்லாக் (32), மத்மன்னா (33), சன்சன்னா (34), லெபாயோத் (35), சில்லீம் (36), ஆயின் (37), ரிம்மோன் (38) ஆகிய இருபத்தொன்பது பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும்.

யோசுவா 15:21-32

கூறியிருப்பதோ தனித்தனியாக 38 பட்டணங்கள். ஆனால் பைபிளோ மொத்த எண்ணிக்கை 29 என்கின்றது.

13.அவர்களுக்கு பள்ளத்தாக்கு நாட்டில் கிடைத்த பட்டணங்கள் எத்தனை?

பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல் (1), சோரியா (2), அஷ்னா (3), சனோகா (4), என்கன்னீம் (5), தப்புவா (6), ஏனாம் (7), யர்மூத் (8), அதுல்லாம் (9), சோக்கோ (10), அசேக்கா (11), சாராயீம் (12), அதித்தாயீம் (13), கெதேரா (14), கேதெரொத்தாயீம் (15) ஆகிய பதினான்கு பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும்.

யோசுவா 15:33-36

கூறியிருப்பதோ தனித்தனியாக 15 பட்டணங்களின் பெயர்கள். ஆனால் பைபிளோ மொத்த எண்ணிக்கை 14 என்கின்றது.

14.சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு கிடைத்த பட்டணங்கள் எத்தனை?

சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா (1), சேபா (2), மொலாதா (3), ஆசார்சூகால் (4), பாலா (5), ஆத்சேம் (6), எல்தோலாத் (7), பெத்தூல் (8), ஒர்மா (9), சிக்லாக் (10), பெத்மார்காபோத் (11), ஆத்சார் (12), சூசா (13), பெத்லெபாவோத் (14), சருகேன் (15) ஆகிய பதின்மூன்று பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்.

யோசுவா 19:2-6

கூறியிருப்பதோ தனித்தனியாக 15 பட்டணங்களின் பெயர்கள். ஆனால் பைபிளோ மொத்த எண்ணிக்கை 13 என்கின்றது.

வேதவசனங்கள் அனைத்தும் தேவனால் கொடுக்கப்பட்டவை.

2 திமோத்தேயு 3:16

எண்ணிச் சொல்லக் கூடிய இவ்வெளிய கணிதம் கூட பைபிள் ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. பைபிள் இறைவார்த்தை என்றால் கணிதம் கூட தெரியாதவரா கடவுள்? இவ்வளவு குளறுபடியுள்ள பைபிளை இறைவேதம் என்று சொல்வது இறைவனை இழிவுப்படுத்துவதாக ஆகாதா? கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள்…


செயற்பாடுகள்

Information