இயேசுவின் தரிசனமும், பவுலின் பொய்யும்…

21 06 2013

கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.

1 கொரிந்தியர் 15:3-8

இயேசு மரணித்து உயிர்த்தெழுந்து(?) அனைவருக்கும் காட்சியளித்தாராம். கூடவே பவுலுக்கும் தரிசனமானாராம். இயேசு பவுலுக்கு தரிசனமான விதத்தையும், வழமை போல் அதிலும் பைபிள் முரண்படுவதைப் பற்றியும் இப்பதிவில் காண்போம்…

பவுலிற்கான இயேசுவின் தரிசனம் பற்றி மூன்று இடங்களில் உள்ள பைபிள் வசனங்கள்:

அப்போஸ்தலர் 9:3-8

அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலர் 22:6-11

அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.

அப்போஸ்தலர் 26:12-15

இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றார்.

மேலுள்ள (முரண்பாட்டு) வசனங்களிலிருந்து எழும் கேள்விகள்:

சவுலுடன் பயணம் செய்தவர்கள் இயேசுவின் சப்தத்தை மட்டும் கேட்டு, ஒருவரையும் பார்க்கவில்லை என்பது உண்மையா? அல்லது வெளிச்சத்தை மட்டும் கண்டு இயேசுவின் சப்தத்தைக் கேட்கவில்லை என்பது உண்மையா?

பவுல் மட்டும் தரையில் விழுந்து, மற்றவர்கள் நின்று கொண்டிருந்தார்கள் என்பது உண்மையா? அல்லது அனைவரும் தரையில் விழுந்தார்கள் என்பது உண்மையா?

வானத்திலிருந்து வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றிப் பிரகாசித்தது என்பது உண்மையா? அல்லது அனைவரையும் சுற்றிப் பிரகாசித்தது என்பது உண்மையா?

உரையாடல் முடிந்து பவுல் கண்ணைத் திறந்த போது அங்கு யாரும் இல்லை என்பது உண்மையா? அல்லது அந்நேரத்தில் அவனுக்கு கண் தெரியாமல் இருந்தது உண்மையா?

முரண்பாடுகளுடைய பொய்யான இக்கதையைக் கூறி தான் வில்லனாக இருந்த பவுல் இயேசு எனக்கு தரிசனமானார் என்று சொல்லி தன்னை இயேசுவின் மீது அன்பு கொண்ட அப்போஸ்தலன் போல் காட்டிக் கொண்டார்.

என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

ரோமர் 3:7

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும். என்னைச் சகித்துமிருக்கீறீர்களே.

2 கொரிந்தியர் 11:1

தன்னைத் தானே பொய்யன், புத்தியில்லாதவன் என்று கூறும் ஒருவனின் உளறல் தான் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதி.

வேதவசனங்கள் அனைத்தும் தேவனால் கொடுக்கப்பட்டவை.

2 திமோத்தேயு 3:16

தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை.

நீதிமொழிகள் 30:5

எவ்வித குறைகளுமற்ற (?), இறைவார்த்தையான (?) பைபிளில் எப்படி இந்த முரண்பாடுகள் வந்தது? இப்படி முரண்பாடுகளுடையது எப்படி இறைவேதமாக இருக்க முடியும்? இவ்வளவு குளறுபடியுள்ள பைபிளை இறைவேதமாகக் கருதுபவர்களே சிந்தியுங்கள்…


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: