படைப்புகள் உருவான விதம்

18 03 2013

படைப்புகள் உருவான விதம் பற்றிய பைபிளின் உளறல்கள், முரண்பாடுகள் பற்றி இப்பதிவில் காண்போம்:

1.ஏற்கனவே படைத்த வானத்தையும், பூமியையும் இன்னொரு முறை படைத்த தேவன்(?):

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

ஆதியாகமம் 1:1

முதல் நாளிலேயே கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்து விட்டாரா! பின் மீண்டும் இரண்டாம் நாளில் வானத்தையும், மூன்றாம் நாளில் பூமியையும் படைக்கிறாராம்.

தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:7,8

பின்பு தேவன்: வெட்டாந்தரை தோன்றட்டும் என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்று பேரிட்டார். மூன்றாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:9,10,13

முன்பே படைக்கப்பட்ட வானத்தையும், பூமியையும் மீண்டும் எப்படி படைப்பது?

2.சூரியன் படைக்கப்படாமலே, நாட்கள் ஓடிய கதை:

பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:13-19

சூரியனை பார்த்தபடி இருக்கும் பூமியின் பகுதியில் பகலும், அதன் எதிர்பகுதியில் இரவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பைபிளோ, சூரியனே நான்காம் நாள் தான் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது. சூரியனே இல்லாமல் காலை, மாலை, பகல், இரவு என கடந்து மூன்று நாட்கள் எப்படி கடந்தது? வெளிச்சம் எப்படி வந்தது?

வெளிச்சம், இருள் ஆகியவற்றை பிரிக்க இவற்றை படைத்ததாக மேற்கண்ட வசனம் கூறுகிறது, ஆனால் இவைகள் இல்லாமலே முதல் நாளின் போதே அவை பிரிக்கப்பட்டிருக்கிறது.

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வேறுவேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று

ஆதியாகமம் 1:3-5

3. தாவரங்கள் – மனிதன் இதில் முதலில் படைக்கப்பட்டது எது?

தாவரங்கள் மனிதன்

பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும்விருட்சங்களையும் முளைப்பித்தது.

ஆதியாகமம் 1:12

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:27

“நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

ஆதியாகமம் 2:5-9

4. பறவைகள் – மனிதன் இதில் முதலில் படைக்கப்பட்டது எது?

பறவைகள் மனிதன்

தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:21

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:27

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 2:7

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப்பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆதியாகமம் 2:19

5. மிருகங்கள் – மனிதன் இதில் முதலில் படைக்கப்பட்டது எது?

மிருகங்கள் மனிதன்

தேவன் பூமியிலுள்ள ஜாதி ஜாதியான காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியானநாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்.

ஆதியாகமம் 1:25

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:27

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 2:7

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப்பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆதியாகமம் 2:19

6. மனித இனம் எப்படி படைக்கப்பட்டது?

ஆண், பெண் ஒன்றாக ஆண், பெண் தனிதனியே

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:27

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 2:7

ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

ஆதியாகமம் 2:20

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆதியாகமம் 2:22

7. நன்றாக இருக்கிறது, ஆனால் நன்றாக இல்லை:

அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.

ஆதியாகமம் 1:31

அனைத்தையும் நன்றாகப் படைத்த தேவன் பின் இவைகளை ஏன் தான் படைத்தோமென்று இருதயத்தில் வலி ஏற்படும் அளவு வருந்தினாராம்.(?) அவைகள் அனைத்தையும் அழிக்க வேண்டுமென்ற அளவு வேதனைப்பட்டாராம்.

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. “அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

ஆதியாகமம் 6:6,7

அனைத்தையும் நல்ல விதத்தில் படைத்தவர், எதற்காக அவைகளை அழிக்க முடிவெடுத்தார்?. வருந்துபவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? அதுவும் இருதயம் வலிக்கும் அளவு வருந்தினார் என்பது இறைவனை இழிவுப்படுத்தும் செயல் அல்லவா?

இவ்விஷயதிலும் ஒரு முரண்பாடு உண்டு, மேற்கண்ட வசனம் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று கூறுகிறது, ஆனால் பின்வரும் வசனமோ தேவன் மனஸ்தாபப்படுவது கிடையாது என்கின்றது,

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன், நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை, உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 24:14

இறைவனையே இழிவுப்படுத்தும் உளறல்கள் , பிழைகள் , முரண்பாடுகளின் தொகுப்பான பைபிளை இறைவேதமாக நம்பும் கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்…


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: