பைபிளில் ஓரிறைக் கொள்கை 2

17 12 2012

ஓரிறைக்கொள்கையைப் போதிக்கும் பைபிளின் பழைய ஏற்பாட்டு வசனங்களைத் தொடர்ந்து புதிய ஏற்பாட்டிலும் ஓரிறைக்கொள்கையைப் போதிக்கும் வசனங்களில் சில:

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

மத்தேயு 4:10

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான்.

மத்தேயு 6:24

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: “கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள். அப்பொழுது, நான், “ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7:21-23

செபதேயுவின் குமாரருடைய தாய், இயேசுவை நோக்கி: “உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும்” என்றாள். அதற்கு இயேசு, “என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றெவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல” என்றார்.

மத்தேயு 20:21,23

“போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக”, இது முதலாம் பிரதான கற்பனை.

மத்தேயு 22:36-38

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

மத்தேயு 23:9

அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றெவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

மத்தேயு 24:36

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

மாற்கு 10:18

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

மாற்கு 12:29

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.

யோவான் 17:3

விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

ரோமர் 3:30

உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு.

1 கொரிந்தியர் 8:4,6

தேவனோ ஒருவர்.

கலாத்தியர் 3:20

எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.

எபேசியர் 4:6

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக.

1 தீமோத்தேயு 6:16

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லது.

யாக்கோபு 2:19

இவைகளெல்லாம் பைபிளின் வசனங்கள் தாம். இறைவன் ஒருவரே, அவருக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று தான் பைபிள் கூறுகிறது. இயேசு போதித்ததும் ஓரிறைக்கொள்கையைத் தான் என்றும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளை இறைவேதமாக நம்பும் பெரும்பாலான கிறிஸ்தவர்களோ இயேசுவையும் இறைவனாக்கி விட்டனர். இவர்களின் இந்த நம்பிக்கை பைபிளுக்கே எதிரானது. கிறிஸ்தவ சகோதர்களே சிந்தியுங்கள்…

“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: