கல்லறை முரண்பாடுகள்

18 11 2012

சிலுவையில் அறையப்பட்ட(?) இயேசுவின் உடல் ஒரு கல்லறையில் வைக்கப்பட்டதாம். அவ்விடத்திற்கு வந்தவர்களைப் பற்றி கூறும் போது பைபிள் முரண்படுகிறது. அவ்விடத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர்?

ஒருவர்:

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

யோவான் 20:1

இருவர்:

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

மத்தேயு 28:1,2,8

மூவர்:

ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு, வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது கல்லறையினிடத்தில் வந்தார்கள். நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்: அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.

மாற்கு 16:1,2,8

பலர்:

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள். இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனே கூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

லூக்கா 24:1,4,10

ஒருவரா? இருவரா? மூவரா? அல்லது பலரா? இதில் எது சரி?

இதிலுள்ள மேலும் சில முரண்பாடுகள்:

மகதலேனா மரியாள் வருகையில் அதிக இருளாக இருந்தது என்று யோவான் கூறுகிறார். ஆனால் மாற்கோ சூரியன் உதயமாகி ஆரம்பித்து விட்டது என்கிறார். இதில் எது சரி?

மகதலேனா மரியாள் வரும் முன்பே கல்லறையின் கல் எடுத்துப் போடப்பட்டிருந்தது என்று யோவான் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ அவர்கள் வந்த பின் தான் கல் எடுக்கப்பட்டதாக கூறுகிறார். இதில் எது சரி?

கல்லறையிலிருந்த தூதன் ஒருவர் என்று மத்தேயு கூறுகிறார். ஆனால் லூக்காவோ இருவர் என்கிறார். இதில் எது சரி?

கல்லறைக்கு வந்தவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை(?) சீடர்களுக்குத் தெரிவித்தார்கள் என்று மத்தேயு கூறுகிறார். ஆனால் மாற்கோ அவ்விஷயத்தை யாருக்கும் சொல்லவில்லை என்கிறார். இதில் எது சரி?

வேதவசனங்கள் அனைத்தும் தேவனால் கொடுக்கப்பட்டவை.

2 திமோத்தேயு 3:16

தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை.

நீதிமொழிகள் 30:5

தேவன் குழப்பத்தின் தேவனல்ல.

1 கொரிந்தியர் 14:33

பைபிள் வசனங்கள் தேவனுடையது என்றால் இதில் முரண்பாடுகள் எப்படி வந்தது?, குழப்பும் ஒன்று தேவனுடையதாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்ட ஒன்றை இறைவேதமாகக் கருதும் கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள்…


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: