அப்போஸ்தலர்கள்

13 11 2012

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:

மத்தேயு 20:17

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.

மத்தேயு 11:1

இவ்வசனங்களில் மட்டுமல்லாமல், இன்னும் பல வசனங்கள் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால் அந்த பன்னிரண்டு சீடர்களின் பெயர்களைக் குறிப்பிடும் போது பைபிள் முரண்படுகிறது. அத்தகைய முரண்பாடு:

1. 12 சீடர்களின் பெயர்கள் என்னென்ன?

மத்தேயு (10:2-4) கூறும் 12 சீடர்களின் பெயர்கள் லூக்கா (6:14-16) கூறும் 12 சீடர்களின் பெயர்கள்

1.பேதுரு(சீமோன்)

2.பேதுருவின் சகோதரன் அந்திரேயா

3.செபெதேயுவின் குமாரன் யாக்கோபு

4.யாக்கோப்பின் சகோதரன் யோவான்

5.பிலிப்பு

6.பர்தொலொமேயு

7.தோமா

8.மத்தேயு

9.அல்பேயுவின் குமாரன் யாக்கோபு

10.ததேயு(லெபேயு)

11.சீமோன்

12.யூதாஸ்காரியோத்து

1.பேதுரு(சீமோன்)

2.பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா

3.யாக்கோபு

4.யோவான்

5.பிலிப்பு

6.பர்தொலொமேயு

7.மத்தேயு

8.தோமா

9.அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு

10.சீமோன்

11.யாக்கோபின் சகோதரனாகிய யூதா

12.யூதாஸ்காரியோத்து

11 பெயர்கள் இரண்டிலும் ஒன்றாக உள்ளது. ஆனால் ஒரு பெயரில் பைபிள் முரண்படுகிறது. மத்தேயு 12 வது நபர் ததேயு (எ) லெபேயு என்று கூறுகிறார். ஆனால் லூக்காவோ அது யாக்கோபின் சகோதரனாகிய யூதா என்கிறார். இதில் எது சரி? பைபிளில் பரவலாகப் பேசப்படும் 12 சீடர்களின் பெயரில் முரண்பாடு வர என்ன காரணம்?

2. இயேசு உயிர்த்தெழுந்த(?) பின் எத்தனை சீடர்களுக்குத் தரிசனமானார்?

10 11 12
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

யோவான் 20:24

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமானார்.

மாற்கு 16:14

கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

1 கொரிந்தியர் 15:5

(12 சீடர்களில் ஒருவனான யூதாஸ் மரணித்த பின்பும் எப்படித்தான் 12 வந்ததோ)

3.ஆயத்துறையில் இருந்த சீடரின் பெயர் என்ன?

மத்தேயு லேவி
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: என்னைப் பின்தொடர்ந்து வா என்றார், அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

மத்தேயு 9:9

அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு, என்னைப் பின்தொடர்ந்துவா என்றார், அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

மாற்கு 2:14

4.இயேசு கடலின் ஆவேச அலைகளை அமைதிப்படுத்தியது (8:23-27),12 சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் (10:1-4) முன் நடந்தது என்று மத்தேயு கூறுகிறார். ஆனால் 12 சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்த (3:13-19) பின்பு தான் இயேசு கடலின் ஆவேச அலைகளை அமைதிப்படுத்தினார் (4:35-41) என்று மாற்கு கூறுகிறார். இவ்விரண்டில் எது சரி?

5.இயேசு, பிசாசுகளை பன்றிக் கூட்டதினுள் புகுத்தியது (8:28-32), 12 சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் (10:1-4) முன் நடந்தது என்று மத்தேயு கூறுகிறார். ஆனால் 12 சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்த (3:13-19) பின்பு தான் இயேசு பிசாசுகளை பன்றிக் கூட்டதினுள் புகுத்தினார் (5:1-13) என்று மாற்கு கூறுகிறார். இவ்விரண்டில் எது சரி?

இவ்வளவு குளறுபடியுள்ள பைபிளை இறைவேதமாக கருதும் கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள்.


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: